Home One Line P1 “1எம்டிபி நிதிநிலை அறிக்கைகளின் முரண்பட்ட பதிப்புகளை நீக்க அருள் கந்தா வலியுறுத்தினார்!”- அலி ஹம்சா

“1எம்டிபி நிதிநிலை அறிக்கைகளின் முரண்பட்ட பதிப்புகளை நீக்க அருள் கந்தா வலியுறுத்தினார்!”- அலி ஹம்சா

1036
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி இறுதி கணக்கறிக்கையிலிருந்து நான்கு பிரச்சனைகள் வெளியிட ஒப்புக் கொள்ளப்பட்டதாக முன்னாள் பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா நேற்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவற்றில் ஒன்று 2014-ஆம் ஆண்டில் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளின் இரண்டு முரண்பாடான பதிப்புகள் குறித்ததாகும் என்று அவர் தெரிவித்தார்.

2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதியன்று டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உத்தரவின் பேரில் நடைபெற்ற 1எம்டிபி இறுதி கணக்கறிக்கை திருத்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முன்னாள் கணக்காய்வாளர் டான்ஸ்ரீ அம்ப்ரின் புவாங் இந்த விவகாரத்தை எழுப்பியதாக 64 வயதான அலி கூறினார். ஆனால், இந்த கூட்டம் குறித்த பதிவுகள் எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“1எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் 1எம்டிபி அறிக்கையில் பல விஷயங்களுக்கு அவர் ஆட்சேபனை தெரிவித்தார். ஏன் என்று விளக்குமாறு நான் அவரிடம் கேட்டபோது, 2014-ஆம் ஆண்டிற்கான 1எம்டிபியின் நிதிநிலை அறிக்கைகளில் இரண்டு வெவ்வேறு பதிப்புகள் இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.” என்று அலி குறிப்பிட்டார்.

“தேசிய தணிக்கைத் துறையின் 1எம்டிபி கணக்கறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்ட விடயத்தை அருள் கந்தா ஆட்சேபித்தார், ஏனெனில் அது உண்மையான விடயங்கள் அல்ல, வெறுமனே கேட்ட விடயம் மட்டுமே, எனவே இதுபோன்ற விவகாரங்களை அறிக்கையிலிருந்து நீக்க வேண்டும் என்று அவர் கோரினார்” என்று அலி தெரிவித்தார்.

1எம்டிபி தணிக்கை அறிக்கையில் முரண்பட்ட பதிப்புகளை சேர்க்க முடியாது என்று அருள் கந்தா வலியுறுத்தியதாகவும், காவல் துறையினரின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியதாக அலி தெரிவித்தார்.

2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதியன்று நடந்த இரண்டாவது கூட்டத்தில், தேசிய தணிக்கைத் துறைக்கு தேவைப்பட்ட 1எம்டிபி தணிக்கை அறிக்கையில் சேர்ப்பதற்காக மூன்று கூடுதல் ஆவணங்களை அருள் கந்தா சமர்ப்பித்ததாகக் கூறியதாக அலி கூறினார்.

மேலும், 1எம்டிபி தணிக்கைக் குழுவுடன் இணைந்து வேலை செய்வது கடினமாக இருப்பதாக அருள் கந்தா குறிப்பிட்டதாக அலி கூறினார்.