Home One Line P1 அம்னோ- பாஸ் கூட்டணி வலுப்பெற்றால் சிலாங்கூர் எதிர்க்கட்சி வசமாகும்!- சாஹிட் ஹமீடி

அம்னோ- பாஸ் கூட்டணி வலுப்பெற்றால் சிலாங்கூர் எதிர்க்கட்சி வசமாகும்!- சாஹிட் ஹமீடி

738
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அவ்வப்போது அம்னோ மற்றும் பாஸ் இடையிலான நல்லிணக்கம் உறுதிப் பெற்றால், முஹாபாகாட் நேஷனல் ஒப்பந்தப்படி சிலாங்கூர் எதிர்க்கட்சியினருக்கு சொந்தமாகும் என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசு எழுப்பிய பல்வேறு பிரச்சனைகளால், மாநிலத்தில் உள்ள மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிறைவேற்றாத வாக்குறுதிகள் மற்றும் நியாயமற்ற கருத்துக்கள் என்று சிலாங்கூர் மாநில அரசாங்கமே சமாளிக்க வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளனஎன்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மிக முக்கியமான விவகாரம் என்னவென்றால், அடையப்பட்ட புரிதலை தக்கவைத்துக் கொள்வதுதான் என்று அவர் குறிப்பிட்டார்.

போருக்கு முன்னர் எந்தவொரு அரசியல் சண்டையையும் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போராட்டத்தில் நம் நோக்கங்களையும் முன்னுரிமைகளையும் பராமரிக்க வேண்டும்.”

அதே நேரத்தில் நாம் இளைஞர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இளைஞர்கள் இப்போது நம்மிடம் திரும்பி வந்துள்ளனர்.” என்று அவர் கூறினார்.