Home One Line P1 அஸ்மின், மகாதீர் இருவரில் ஒருவரின் கூற்றில் உண்மையில்லை!- அனுவார் மூசா

அஸ்மின், மகாதீர் இருவரில் ஒருவரின் கூற்றில் உண்மையில்லை!- அனுவார் மூசா

642
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியின் இருப்பிடத்தில் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தது இரு சாத்தியக்கூறுகளை மட்டுமே கொண்டுள்ளது என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, அஸ்மின் அல்லது பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், இருவரில் ஒருவர் பொய் சொல்லியிருக்கலாம் என்று அனுவார் கூறினார்.

இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன, ஒருவர் கூறுவதில் உண்மை இல்லை. அஸ்மின் ஒரு தவறான அறிக்கையை வழங்கியிருக்கலாம், அல்லது அவர் உண்மையான அறிக்கையை வழங்கியிருக்கலாம், ஆனால் அது உண்மை இல்லை என்று டாக்டர் மகாதீர் கூறுகிறார்என்று அனுவார் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த நவம்பர் 22-ஆம் தேதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை இழந்துவிட்டதாகவும், சந்திப்பின் போது வேறொரு கட்சியில் சேர பரிசீலித்து வருவதாகவும் அஸ்மின் தனக்குத் தெரிவித்ததாக மகாதீர் கூறினார்.

இருப்பினும், அதே நாளில், ஏழுதேசிய முன்னணிநாடாளுமன்றஉறுப்பினர்களும், ஒருநாள்கழித்துஎட்டுஉறுப்பினர்களும் அந்த குற்றச்சாட்டை மறுத்தனர்.

மகாதீரைப் பற்றி அறிந்து கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், 94 வயதான அத்தலைவர் கூறியதை வெளிப்படையாகப் புரிந்துகொள்ள முடியாது, ஏனெனில் அதில் உள் அர்த்தங்கள் இருக்கலாம் என்று அனுவார் கூறினார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரின் அறிக்கையை மறுத்து எழுத்துப்பூர்வமாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். நாங்கள் அவருடன் நீண்ட காலமாக இருந்தோம், எனவே அவர் யார் என்று எங்களுக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார்.

கடந்த நவம்பர் 16-ஆம் தேதி நடந்த தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியை 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி தோற்கடித்த பின்னரும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவது சாத்தியமில்லை என்று அனுவார் கூறினார்.