கோலாலம்பூர்: கடந்த திங்களன்று இங்குள்ள ஜாலான் 16 காப்பார் பத்து ஜாவா, ஜெராம், கோலா சிலாங்கூர் ஆகிய இடங்களில் 200-க்கும் மேற்பட்ட இரசாயன பீப்பாய்கள் எரிக்கப்பட்டு வெடித்த சம்பவத்தில் நாசவேலை இருப்பதாக நம்பப்படுகிறது.
4 பீப்பாய்களில் அரிவால் வெட்டு இருந்ததாகவும், அதனால் அப்பீப்பாய்களிலிருந்து திரவியங்கள் கசிந்து பின்பு எரிக்கப்பட்டதாகவும், சுற்றுச்சூழல், பசுமை தொழில்நுட்பம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மற்றும் சிலாங்கூர் நுகர்வோர் விவகாரங்கள் தலைவர் ஹீ லோய் சியான் கூறினார்.
நாசவேலைக்காக அவ்விடத்திற்குள் ஊடுருவி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவ்வப்போது கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“கடந்த புதன்கிழமை, இரண்டு இடங்களில் கொட்டப்பட்ட 270 பீப்பாய்கள் இரசாயனங்கள் கொண்டிருப்பதை கண்டுபிடிக்கப்பட்டதாக எங்களுக்கு புகார் வந்தது. மொத்தம் 244 பீப்பாய்கள் ஒரே இடத்தில் கொட்டப்பட்டன. மேலும் 26 பீப்பாய்கள் அருகிலேயே சுமார் 500 மீட்டர் தூரத்திற்குள் கொட்டப்பட்டன.”
“அப்பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான அனுமதிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இருப்பினும், சிலது சேறும் சகதியுமாக இருக்கின்றன. 244 பீப்பாய்களில் 14 பீப்பாய்கள் எரிக்கப்படுவதற்கு முன்பு தட்டப்பட்டுள்ளன. அந்த இரசாயனம் ஆபத்தை விளைவிக்கக் கூடியது இல்லையென்றாலும், எளிதில் வெடிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை” என்று அவர் கூறினார்.
பொறுப்பற்ற தரப்பினர் பீப்பாய்களை அகற்றி, அவற்றை அகற்ற முயற்சித்ததால் தீ விபத்து ஏற்பட்டதற்கான வாய்ப்பை ஹீ நிராகரிக்கவில்லை.
இருப்பினும், இது தொடர்பாக எவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், பீப்பாய்களுக்கு எந்த அடையாளங்களும் இல்லாததால், இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்று தீர்மானிக்க மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.