Home உலகம் “பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அனைத்தும் கட்டுக் கதையே!”- டிரம்ப்

“பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அனைத்தும் கட்டுக் கதையே!”- டிரம்ப்

587
0
SHARE
Ad

வாஷிங்டன்: சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களில் தமது அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தம்மைத் தானே புகழ்ந்து பேசியுள்ளார்.

சமீபக் காலமாக அறிவியலாளர்கள் பருவநிலை மாற்றம் குறித்து வெளிப்படுத்தும் அனைத்து கருத்துகளை தகர்த்துப் பேசி வரும் டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்தாலும், பருவநிலை மாற்றம் குறித்து வெளியிடப்படும் அபாயங்கள் அனைத்தும் கட்டுக் கதையே என்று டிரம்ப் மறுத்து வருகிறார்.

ஜனநாயகக் கட்சியினர் இந்த விவகாரத்தில் மிக மோசமாக செயல்படுவதாக அவர் விமர்சித்துள்ளார். காற்று மற்றும் நீரின் தரத்தை தமது திட்டங்கள் மேம்படுத்தியதாக புகழ்ந்து கொண்ட அவர், ஆற்றல் துறையில் தமது நிருவாகம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

பருவநிலை தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது சரியே என்றும் அவர் வாதிட்டுள்ளார். பருவநிலை தொடர்பான டிரம்ப்பின் நிலைப்பாட்டை சூழலியலாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.