கோலாலம்பூர்: பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பதை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க உள்ளதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
“ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், சிலவற்றை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால், அனைத்து வாக்குறுதிகளையும் எவ்வாறு செயல்படுத்துவது என்பதை ஆராய வேண்டிய நேரம் இது.” என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பிரதமரின் சிறப்பு அமர்வுக்கான (பிஎம்கியூ) அழைப்புக்கு தாம் உடன்படுவதாகவும் மகாதீர் கூறினார்.
“ஒவ்வொரு புதன்கிழமையும், நான் கேள்விகளுக்கு பதிலளிக்க நாடாளுமன்றத்தில் இருப்பேன். நான் நாடாளுமன்றத்தில் இல்லாவிட்டால் அது என் தவறு அல்ல, ஏனென்றால் எனக்கு எந்த கேள்வியும் இல்லை. இப்போது, எனக்கு எந்த கேள்வியும் இல்லை, ஆனால், நான் இன்னும் நாடாளுமன்ற அமர்வுக்கு செல்கிறேன்” என்று அவர் மீண்டும் கூறினார்.
கடந்த ஜூலை 4-ஆம் தேதி, பிரதமர் துறை அமைச்சர் லீ வூய் கியோங் பிரதமருடனான கேள்வி பதிலுக்கான சிறப்பு அமர்வு அடுத்த அக்டோபரில் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்.