கோலாலம்பூர்: ஆசிய வணிக தகவல் இதழில், ஆசியாவின் முதல் ஏழு சுற்றுச்சூழல் அமைச்சர்களில் ஒருவராக டத்தோஸ்ரீ துவான் இப்ராகிம் துவான் மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தவிர, இந்தோனிசியாவைச் சேர்ந்த டாக்டர் சித்தி நூர்பயா பக்கர், மசகோஸ் சுல்கிப்ளி (சிங்கப்பூர்), பிரகாஷ் ஜவடேகா (இந்தியா), இசா கலந்தரி (ஈரான்), டேவிட் பார்க்கர் (நியூசிலாந்து) மற்றும் சோ மியுங்-பே (தென் கொரியா) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மலேசியாவிற்கு பெருமை சேர்த்த துவான் இப்ராகிமின் தேர்வு பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
இருப்பினும், சிலர் இந்த தேர்வுக்கான அளவுகோல்களையும் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு மட்டுமே அந்த பதவியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளதால், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் எதன் அடிப்படையில் இதற்கு தேர்வு செய்யப்பட்டார் என்ற கேள்விகளும் உள்ளன.