Home One Line P1 சொந்த மண்ணில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற சின் பெங்கின் கடைசி ஆசை நிறைவேறியது!

சொந்த மண்ணில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற சின் பெங்கின் கடைசி ஆசை நிறைவேறியது!

761
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, மலாயா கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைவர் சின் பெங்கின் சாம்பல் இறுதியாக மலேசியாவை வந்தடைந்தது.

அவர் இந்நாட்டில் பிறந்தார் என்பதை நிரூபிக்க முடியாததால், கடந்த ஏப்ரல் 2009-இல்கூட்டரசு நீதிமன்றம் அவரது விண்ணப்பத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது.

அண்மையில், சொந்த மண்ணில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முன்னாள் சிபிஎம் பொதுச்செயலாளரான சின் பெங்கின் சாம்பல் மலேசியாவில் பேராக் நகரில் இரண்டு இடங்களில் கரைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

சின் பெங்கின் சாம்பல் செமோரில் உள்ள மலைப்பகுதியிலும் லுமுட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் கடலிலும் கரைக்கப்பட்டதாக, சின் பெங்கின் சாம்பலைக் கையாள்வதில் குழு ஒன்றை வழிநடத்தும் சாய் கான் பூக் தெரிவித்தார்.

தனது 89-வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு 2013-இல்சின் பெங் தாய்லாந்தில் புற்றுநோயால் காலமானார்.

​​”இறந்த தோழர்களுடன் மலைகளுக்கு அருகே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அவரது கடைசி விருப்பங்களில் ஒன்றாகும்.” என்று சாய் தெரிவித்தார்.

செப்டம்பர் 16-ஆம் தேதி தாய்லாந்தில் இருந்து சாம்பல் மீண்டும் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டது. அதே நாளில் இங்கு அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்றது.

அவரது குடும்பத்தினர் அவரது சாம்பலை தாய்லாந்திலிருந்து கொண்டு வந்தனர்.” என்று அவர் குறிப்பிட்டார்.

சின் பெங்கின் முன்னாள் துணை அதிகாரிகளில் ஒருவரான சாய், அவர்கள் எந்தவொரு பிரச்சனையையும் ஏற்படுத்த விரும்பாததால் இந்த விஷயத்தில் எந்த முன் அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று கூறினார்.

நாங்கள் என்ன செய்தோம் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மட்டுமே நாங்கள் இப்போது தெரிவிக்கிறோம்.

நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, அவரது சாம்பலை மீண்டும் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்யத் தொடங்கினோம்,” என்று அவர் கூறினார்.

அவரது சாம்பலை மீண்டும் கொண்டு வருவதைத் தடுக்க எந்த சட்டமும் இல்லை என்று அரசாங்கத்தில் ஒருவர் எங்களிடம் கூறினார். குறைந்தபட்சம் இப்போது குழு தனது கடைசி விருப்பத்தை நிறைவேற்ற உதவியது,” என்று அவர் கூறினார்.

சின் பெங்கின் சாம்பலை மலேசியாவுக்கு கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கம் கூறியிருந்தது.