Home One Line P1 சின் பெங் விவகாரத்தை இனப்பிரச்சனையாக உருமாற்ற முயற்சி!- பெட்ரியோட்

சின் பெங் விவகாரத்தை இனப்பிரச்சனையாக உருமாற்ற முயற்சி!- பெட்ரியோட்

745
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான சின் பெங்கின் தகனச் சாம்பல் விவகாரம் அரசாங்கத்தை வேண்டுமனே குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும் ஒரு சிலரின் நடவடிக்கையாக தாம் கருதுவதாக முன்னாள் இராணுவ வீரரும், தேசிய தேசபக்தர்கள் சங்கத்தின் (பெட்ரியோட்) தலைவருமான முகமட் அர்ஷாட் ராஜி தெரிவித்தார்.

இப்பிரச்சனை குறித்து பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் கூற்றுக்கு அவ்வமைப்பு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.  

கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான போராட்டமானது, இனப்பிரச்சனைகளை எழுப்புவதை விட, எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் என்று தான் நம்புவதாக அர்ஷாட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நான் கவலைப்படுகிறேன். பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் இன மோதல்களைத் தூண்ட விரும்புகின்றன.”

சின் பெங் ஒரு தேசத்துரோகி என்று கருதப்பட்டது உண்மையானால், ஏன் மலாய்க்காரர்கள் சிலர் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தது மட்டும் தேசத்துரோகமாகப் பார்க்கப்படவில்லை?”

சிபிஎம்மை எதிர்த்துப் போராடுவதிலும், அப்போராட்டத்தைப் பார்த்து ஈடுபட்ட ஒரு முன்னாள் சிப்பாய் என்ற முறையில் கூறுகிறேன், வருங்கால சந்ததியினர் அதனை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன”.என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை மலேசியாகினியிடம் கூறினார்.

முன்னதாக நேற்று வியாழக்கிழமை, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சின் பெங் தகனச் சாம்பல் விவகாரம் வேண்டுமனே பிரச்சனையாகக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.