Home One Line P1 “சின் பெங்கின் சாம்பலினால் எந்த அச்சுறுத்தலும் இல்லை, தேவையற்ற கருத்துகள் வேண்டாம்!”- ராகிம் நூர்

“சின் பெங்கின் சாம்பலினால் எந்த அச்சுறுத்தலும் இல்லை, தேவையற்ற கருத்துகள் வேண்டாம்!”- ராகிம் நூர்

779
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சின் பெங்கின் சாம்பலினால் இனி எந்தவொரு அச்சுறுத்தலும் நடக்கப்போவதில்லை என்று முன்னாள் காவல் துறைத் தலைவர் அப்துல் ராகிம் நூர் தெரிவித்துள்ளார். மலாயா கம்யூனிஸ்ட் கட்சி தலைவரின் சாம்பலைக் கொண்டுவந்த குற்றச்சாட்டை அவர் ஆதரித்து பேசியுள்ளார்.

1989 டிசம்பரில் தாய்லாந்தின் ஹட்டாயில் அரசாங்கத்துடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதிலிருந்து மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) போராட்டம் முடிந்துவிட்டதாக அப்துல் ராகிம் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ஒப்பந்தம் இருந்ததை தெளிவாகக் காட்டுகிறது.”

#TamilSchoolmychoice

நம் நாடு அமைதியான எதிர்காலத்தை எதிர்கொண்டு செல்கிறது. உண்மையில், இந்த விஷயம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து, கம்யூனிச அச்சுறுத்தல் இல்லை. நீங்கள் காவல் துறை சிறப்பு கிளை உடன் சரி பார்த்துக் கொள்ளலாம். அப்படி புதிதாக நிறுவ முற்பட்டால் அதனை நிரூபியுங்கள்”

நான் சொல்வது போல் எந்த வாதங்களும் இனி தேவையில்லை. உலகம் கம்யூனிஸ்டுகளை நிராகரித்துள்ளதுஎன்று அவர்  கூறினார்.

செப்டம்பரில் தனிநபர் குழுவால் மலேசியாவிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்ட சின் பெங்கின் சாம்பலைப் பற்றிய செய்தி குறித்து அப்துல் ராகிம் கருத்துத் தெரிவித்திருந்தார். நேற்றைய அந்த செய்திக்குப் பிறகு பலரின் பரவலான எதிர்ப்புகளை அது தூண்டியது.

சின் பெங் தாய்லாந்தில் கடந்த 2013-இல் இறந்தார்.

சமாதான ஒப்பந்தத்தில் நேரடியாக ஈடுபட்டிருந்த அப்துல் ராகிம் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளிபடி சின் பெங் உட்பட அனைத்து சிபிஎம் தலைவர்களுக்கும் வீடு திரும்ப அனுமதித்தன என்றார். இருப்பினும்,  சின் பெங் மற்றும் சிபிஎம்மின் பல மூத்த தலைவர்கள் அந்த நேரத்தில் திரும்பி வரப்போவதில்லை என்று முடிவு செய்ததாகக் கூறினார்.

எனவே சின் பெங் திரும்பி வர முடிந்தால், அவரின் சாம்பல் ஏன் திரும்பி வர முடியாது. இவர்கள் ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள்?” என்று அவர் கூறினார்.

இது ஒரு பிரச்சனை என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் விளக்கினார்.