மலாக்கா: எஸ்பிஎம் தேர்வு முடிந்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், மலாக்காவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடங்களில் மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக செலுத்தி மலேசியர்களின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
நேற்று புதன்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட படங்கள் மற்றும் காணொளிகளில் அவர்கள் மோசமாக நடந்துக் கொண்டது வருத்தத்தை அளிப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பந்தாய் க்ளெபாங் , பந்தாய் புத்ரி மற்றும் பண்டார் ஹிளிர் ஆகிய இடங்களில் இவ்வாறு நடந்துள்ளது.
இது சத்தத்தால் பொதுமக்களைத் தொந்தரவு செய்தது மட்டுமல்லாமல், பெண் மாணவர்கள் உட்பட சாலையில் பல்வேறு அபாயக்கரமான நடவடிக்கைகளை மேற்கொண்டதால், மற்ற பயனர்கள் அவர்களுக்கு இடம் கொடுக்க விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அக்கும்பலின் கொடூரமான செயல்களைப் பதிவு செய்ததோடு இல்லாமல், பொதுவில் புகைபிடித்தல் போன்ற ஆரோக்கியமற்ற செயல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மாநில போக்குவரத்து அமலாக்க புலனாய்வுத் துறை தலைவர் ஹாசன் பாஸ்ரி யஹ்யாவை அஸ்ட்ரோ அவானி தொடர்பு கொண்டபோது, கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், 17 எஸ்பிஎம் மாணவர்களுக்கு, பல்வேறு குற்றங்களுக்காக 17 சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறினார்.
ஓட்டுநர் உரிமம், காலாவதியான பயண வரி மற்றும் வாகன மாற்றி அமைக்கப்பட்டது ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.