Home One Line P2 திரெங்கானு முதலீட்டு வாரியம்: சுல்தான் மிசான் மற்றும் ஜோ லோ ஆகியோரின் கலந்துரையாடலின் வாயிலாகத் தோன்றியது!-...

திரெங்கானு முதலீட்டு வாரியம்: சுல்தான் மிசான் மற்றும் ஜோ லோ ஆகியோரின் கலந்துரையாடலின் வாயிலாகத் தோன்றியது!- நஜிப்

814
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதியை தவறாகப் பயன்படுத்தியதன் தொடர்பான குற்றவியல் வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை 59-வது நாளாக  கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மற்றும் சுல்தான் மிசான் சைனால் அபிடின் மற்றும் அவரது சகோதரி தெங்கு ரஹிமா சுல்தான் மஹ்மூட் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக நஜிப் தெரிவித்தார்.

2009-ஆம் ஆண்டில் திரெங்கானு முதலீட்டு வாரியம் (டிஐஏ) நிறுவப்பட்டபோது, ​திரெங்கானு சுல்தானான சுல்தான் மிசான் மாமன்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது. டிஐஏ பின்பு 1எம்டிபியாக பெயர் மாற்றம் கண்டது.

#TamilSchoolmychoice

தமது புரிதலின் அடிப்படையில், ஜோ லோ மற்றும் சுல்தான் மிசானுக்கு இடையிலான கலந்துரையாடலின் வாயிலாக டிஐஏவின் யோசனை வந்ததாக நஜிப் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

டிஐஏ கருத்து, நான் புரிந்து கொண்டபடி, ஜோ லோ மற்றும் சுல்தான் மிசான் மற்றும் திரெங்கானு மாநில அரசாங்கத்திற்கு இடையிலான விவாதங்களிலிருந்து வந்தது.”

அந்நேரத்தில் டிஐஏ ஆலோசனைக் குழுத் தலைவரின் ஆலோசகராக ஜோ லோ நியமிக்கப்பட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.என்று அவர் கூறினார்.

திரெங்கானு முதலீட்டு வாரியத்தை (டிஐஏ) மத்திய அரசு கைப்பற்றுவதற்கான அமைச்சரவை முடிவு மாநில மற்றும் மாமன்னர் தர்மசங்கடத்தை எதிர்நோக்கும் நிலையை தடுக்கும் முயற்சியில் எடுக்கப்பட்டது என்று நஜிப் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் தனது சாட்சிய அறிக்கையை வாசிக்கும் போது இதனை சுட்டிக்காட்டினார்.