Home One Line P1 நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் நிறைவடைந்தும் இன, மத பிரச்சனைகள் ஓயவில்லை!- காவல் துறை

நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் நிறைவடைந்தும் இன, மத பிரச்சனைகள் ஓயவில்லை!- காவல் துறை

794
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் இன மற்றும் மத பிரச்சனைகளை தூண்டி விடும் சில தரப்புகளின் நடவடிக்கைகள் காவல் துறைக்கு சுமையை ஏற்படுத்துவதாக காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

​​நாடு சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆனபோதிலும், இம்மாதிரியான விவகாரங்களினால் பிரச்சனைகளைத் தூண்ட முற்படுவோர் முதிர்ச்சியடையவில்லை என்பதில் சற்று ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காவல் துறை பெரும்பாலும் தேவையற்ற சிக்கல்களால் சுமக்கப்படுவதாகவும், அதன் முன்னுரிமை இப்போது காவல் துறை புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையத்தை (ஐபிசிஎம்சி) புதுப்பித்து, அதன் அணியை சரி செய்வதாகும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

காவல்துறைத் தலைவராக எனக்கு தனிப்பட்ட எண்ணம் எதுவும் இல்லை, நான் அரசியல் விளையாடுவதில்லை.”

ஹுலு லங்காட் காவல் துறை முடிவை, பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் நம்புகிறேன். இந்த பிரச்சனை யாருடைய தணிக்கைக்கும் இடமளிக்காது.”

சுதந்திரம் பெற்ற 62 ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் புத்திசாலித்தனமாக இருந்திருக்க வேண்டும், ஆனால் வருத்தமாக இருக்கிறது.” என்று அப்துல் ஹாமிட் கூறினார்.

சீன கல்வியாளர் குழு (டோங் சோங்) ஏற்பாட்டில் காஜாங்கில் ஜாவி போதனை எதிர்ப்பு மாநாட்டை நடத்துவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவை கேள்விக்குட்படுத்திய சில தரப்பினரின் அதிருப்தி குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அப்துல் ஹாமிட் இதனைக் கூறினார்.