சென்னை: நடிகர் விஷ்ணு விசால் தயாரிப்பில், இயக்குனர் கௌதம் மேனன் முதல் முறையாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘சிலுக்குவார்பட்டி‘ திரைப்படத்தை அடுத்து நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் திரைப்படம் “எப்ஐஆர்” (பைசால் இப்ராகிம் ராயிஸ்). இத்திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்குகிறார்.
இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்துள்ளார். இந்த கதாப்பாத்திரம் படம் முழுக்க வரும் என கூறப்படுகிறது.
இப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், கௌவுதம் மேனனிடம் துணை இயக்குனராக முன்னதாக பணியாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தில், மஞ்சிமா மோகன், ரைஸா விலசன், ரெபா மோனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.