சென்னை: நடிகர் விக்ரம் நடித்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் பின்னணி பணிகள் துவங்கி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்றும் இயக்குனர் கௌதம் மேனன் கடந்த ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 2 ஆண்டுகளும் மேலாக இந்த படம் நிலுவையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டே வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் இன்றளவும் நிறைவுபெறாதது விக்ரம் மற்றும் கௌதமின் இரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிவுற்ற நிலையில் அடுத்தக் கட்ட வேளைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.