கோலாலம்பூர்: அரசியல் மாற்றத்தை அடுத்து நாட்டின் ஆட்சியில் அமர்ந்துள்ள தேசிய கூட்டணியின் ஆட்சியில் நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் விவாதங்கள் இல்லாத போது, அடுத்த பொதுத் தேர்தல் வரைக்கும் காத்திருக்க இயலாது என்று நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அத்தகைய முக்கியமான விவாதங்கள், மறுசீரமைப்பு இல்லாத நிலையில், நாட்டின் நிர்வாகத்தை கைப்பற்ற 15- வது பொதுத் தேர்தல் வரை காத்திருக்க முடியாது என்று அவர் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி திடீர் தேர்தலைத் தூண்டாது, ஆனால் அடுத்த கட்டத்தை எடுப்பதற்கு முன், மக்களவையில் பெரும்பான்மையைப் பெற முயற்சிப்பதாக அவர் கூறினார்.
“நாடாளுமன்றத்தில் எந்த திருத்தமும் இல்லை, பிரதான ஊடகங்கள் இப்போது மிகவும் கீழ்ப்படிந்ததாகத் தெரிகிறது. மேலும் சமூகம், ஊடகவியலாளர்கள் மற்றும் பிறருக்கு இடையூறு ஏற்படுகிறது.
“எனவே மாற்றத்தை விரைவாகச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நான் நினைக்கிறேன், தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம்.” என்று அவர் கூறினார்.
மே 18 அன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தேசிய கூட்டணிக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கூடுதலாக இருந்தன.