கோலாலம்பூர்: தூரநோக்கு இலக்கு 2020 நிலையை அடைய முடியாததற்கு ஐந்து மற்றும் ஆறாவது பிரதமர்களின் அணுகுமுறையே காரணம் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அவர் தொடங்கிய இந்த இலக்கை இந்த ஆண்டு அடைய முடியாத நிலையில், மேலும் பத்து ஆண்டுகளுக்கு அதனை நீட்டிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“இந்த ஆண்டில் நாடு ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, கடந்த 3 தசாப்தங்களுக்கு முன்னர் நாம் தூரநோக்கு இலக்கு 2020-ஐ அறிமுகப்படுத்தினோம்.”
“இருப்பினும், 5 மற்றும் 6-வது அரசாங்கத் தலைவர்கள் எடுத்த அணுகுமுறை காரணமாக, இந்த ஆண்டு அந்த இலக்கை அடைய முடியவில்லை.”
“நாம் அதை இன்னும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
“2019 ஆண்டு முழுவதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் சில பிரச்சனைகள் இருக்கும் என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது. இந்த குரல்களையும் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளையும் நாங்கள் முன்னெடுப்போம் ” என்று அவர் கூறினார்.