Home One Line P1 உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை இன்னும் பலர் அறிந்திருக்கவில்லை!

உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை இன்னும் பலர் அறிந்திருக்கவில்லை!

515
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை (ஜனவரி 1) நாடு முழுவதும் முழு அமலாக்கத்திற்கு வந்த அனைத்து உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் புகைபிடிக்கும் தடைக்கு சிலர் இன்னும் கீழ்ப்படியவில்லை என்பது பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

சில மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட புகையிலை கட்டுப்பாட்டு விதிமுறைகள் 2004 செயல்பாட்டின் மூலம், 12 மாதங்கள் கல்வி அடிப்படையிலான அணுகுமுறை அமல்படுத்திய போதிலும், பலருக்கு இந்ததடை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை எனக்காரணம் கூறியுள்ளது தெரியவந்துள்ளது.

அனைத்து உணவக இடங்கள் உட்பட தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகைபிடிப்பவர்களுக்கு 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில், நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கி மூன்று இடங்களில் அமலாக்க நடவடிக்கைகளின் போது நான்கு கூட்டு எச்சரிக்கை கடிதங்கள் வெளியிடப்பட்டன.

பகாங்கில், மதியம் 2 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் உணவகங்களில் புகைபிடித்தக் காரணத்திற்காக 51 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நெகிரி செம்பிலான் மாநிலம் முழுவதும் ஏழு மாவட்ட சுகாதார அலுவலகங்களைச் சேர்ந்த 95 அமலாக்க அதிகாரிகளின் ஒரே நேரத்தில் 379 உணவு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம்  42 எச்சரிக்கைகடிதங்களை வெளியிட்டனர்.

சராசரியாக உணவக உரிமையாளர்கள் தங்கள் உணவு வளாகத்தில் அமலாக்க அதிகாரிகளின் வருகையால் அதிர்ச்சியடைந்தது தெரிய வந்துள்ளது. மேலும்,  நேற்று தொடங்கிய புகைபிடிக்கும் தடையை அமல்படுத்தியது குறித்து அவர்களுக்கு தெரியாதது எனக் கூறியது வியப்பை அளித்துள்ளது.