Home One Line P1 “நல்லிணக்கம்-தொழில்நுட்ப முன்னேற்றம் அமையட்டும்” – வேதமூர்த்தியின் பொங்கல் திருநாள் வாழ்த்து

“நல்லிணக்கம்-தொழில்நுட்ப முன்னேற்றம் அமையட்டும்” – வேதமூர்த்தியின் பொங்கல் திருநாள் வாழ்த்து

867
0
SHARE
Ad

புத்ராஜெயா: மலேசிய மக்கள் அனைவருக்கும் மலேசிய முன்னேற்றக் கட்சி (ஏம்.ஏ.பி.) சார்பில் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“பொங்கல் பண்டிகை பண்பாட்டு விழாவாகவும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் திருநாளாகவும் அமைவதால், தேசிய அளவில் எல்லா மக்களிடமும் இந்தப் பண்டிகையின் தாக்கம் இன்றைய காலத்தில் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தொழில்நுட்பத்தின் உச்சத்தை நாம் தொட்டாலும் விவசாயம்தான் மனித குலத்துக்கு அடிப்படை. அதனால், வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும். அதேவேளை, இன்றைய இளைஞர்களும் அதிக இலாபந்தரும் வேளாண்தொழிலில் ஆர்வம் காட்டி, நாடு எதிர்நோக்கி இருக்கும் நான்காவது தொழில் புரட்சிக்கு ஏற்ப தங்களை மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அணியப் படுத்திக் கொள்ள வேண்டும்” என்று பிரதமர் துறை அமைச்சருமான வேதமூர்த்தி தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

“அனைவரும் மண்பானையில் பொங்கல் வைத்து, மட்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது வாய்ப்பளிக்க வேண்டும். அதன்வழி, நம் பாரம்பரியத்தையும் கட்டிக்காத்த பெருமையும் நமக்கு கிடைக்கும். மொத்தத்தில் நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, தேசிய உணர்வு, தொழில்நுட்ப சிந்தனை, உள்ளடக்க முன்னேற்றம் ஆகிய கூறுகளை மனதில் நிறுத்தி பொங்கல் நன்னாளைக் கொண்டாடுவோம்” எனவும் தனது வாழ்த்துச் செய்தியில் வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.