தவில், நாதஸ்ரம், உறுமி மேளம் என இசைக் கொண்டாட்டத்தோடு, தேவி ஸ்ரீ நடன அகாடமி நடனகுழுவினரின் மயிலாட்டம், தலையாட்டி பொம்மை, கோலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, புலியாட்டம், பரத நாட்டியம் மற்றும் கிராமிய நடனங்களோடு மின்னலின் தித்திக்கும் பொங்கல் நேயர்களை மகிழ்விக்கும் என மின்னல் பண்பலையின் நிர்வாகி சுமதி தெரிவித்தார்.
மின்னலின் தித்திக்கும் பொங்கலில் மின்னலோடு சேர்ந்து நீங்களும் பொங்கல் வைக்கும் அதே வேளையில், பொங்கல் கொண்டாட்டத்தில் சரம் தொடுத்தல், தோரணம் பின்னுதல், உறி அடித்தல், பொங்கல் வைத்தல், வர்ணம் தீட்டும் போட்டிகளோடு மின்னலின் தித்திக்கும் பொங்கல் களை கட்டவுள்ளது. ஆக, மறக்காமல் மின்னலின் பொங்கல் குதூகலத்தில் இணைய வாருங்கள் என மின்னல் பண்பலை குடும்பத்தினர் நேயர்களை அழைக்கின்றனர்.