Home One Line P2 தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழா: தமிழுக்கே முதன்மை இடம் கொடுக்கப்படும்!- மாஃபா பாண்டிராஜன்

தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழா: தமிழுக்கே முதன்மை இடம் கொடுக்கப்படும்!- மாஃபா பாண்டிராஜன்

1118
0
SHARE
Ad

சென்னை: வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் குட முழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், தமிழில் பூசைகளும், அர்ச்சனைகளும் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக வெளியான தீர்ப்பில், குட முழுக்கு விழாவில் சமஸ்கிருதத்தில் மட்டுமே மந்திரங்கள் சொல்லப்படும் என்று சொல்லப்பட்டது.

இதற்கு தமிழ் அமைப்புகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர் கட்டிய கோயிலில் தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தின

#TamilSchoolmychoice

ஆயினும், தமிழக அரசு, தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

பூசைகள் அனைத்திலும் தமிழ் மற்றும் சமஸ்கிருத்தில் மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் சொல்லப்படும் என்பதை தெளிவாக சொல்லிவிட்டோம். தமிழ் மொழிக்கே முதன்மை இடம் கொடுக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்என்று மாநில தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.