Home One Line P2 தஞ்சை பெரிய கோயில்: தமிழில் பூசைகளை நடத்தக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி!

தஞ்சை பெரிய கோயில்: தமிழில் பூசைகளை நடத்தக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி!

950
0
SHARE
Ad

சென்னை: தஞ்சை பெரிய கோயிலில் வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி குட முழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், அதனை தமிழில் நடத்த வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செந்தில் நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தஞ்சை பெரிய கோயில் என்பது தமிழர்களின் அடையாளம் என்றும் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் சைவ ஆகம விதிப்படி கட்டப்பட்டதால், இங்கு தமிழில் பூசைகளும் அர்ச்சனைகளும் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இதனிடையே, இது குறித்த வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், குட முழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக, தமிழிலும், சமஸ்கிருதத்திலும் பூசைகள் நடைபெறும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது, இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது.