தஞ்சாவூர் – அழகான தமிழில் வழிபாடுகள் நடத்தப்பட, சமஸ்கிருதத்திலும் மந்திரங்கள் ஓதப்பட, தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் பெருவுடையார் ஆலயத்தின் குடமுழுக்கு விழா ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடந்தேறியது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் – மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டனர்.
முதன் முதலில் கி.பி. 1010-ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடத்தப்பட்ட தஞ்சை பெரிய கோயில் ஆறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டதாகும். ஆனாலும், இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக உயர்ந்து நின்று தமிழர்களின் பெருமையையும், பழங்காலத் தமிழர்களின் கட்டடக் கலையையும் உலகுக்குப் பறைசாற்றும் சின்னமாக தஞ்சை பெரிய கோயில் திகழ்கிறது.
குறிப்பாக தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி முடித்ததன் மூலம் இன்னும் உச்சரிக்கப்படும் பெயராக இராஜ இராஜ சோழனின் பெயரும் நின்று நிலைத்திருக்கிறது.
இன்று புதன்கிழமை காலையில் நடைபெற்ற தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா குறித்த படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: