Home One Line P1 “தேசிய முன்னணியைப் பின்தொடர்வோம்” – விக்னேஸ்வரன் கூறுகிறார்

“தேசிய முன்னணியைப் பின்தொடர்வோம்” – விக்னேஸ்வரன் கூறுகிறார்

919
0
SHARE
Ad
விக்னேஸ்வரன் – கோப்புப் படம்

பெட்டாலிங் ஜெயா – இங்குள்ள ஷெராட்டன் தங்கும் விடுதிக்கு வந்திருந்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், புதிய அரசாங்கம் அமைக்கப்படுவது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது குறித்து நீங்கள் துன் மகாதீரைத்தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

எனினும் அஸ்மின் அலி பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார் என்பது மட்டுமே தனக்குத் தெரியும் என்றும் பெர்சாத்து கட்சி பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியில் இருந்து வெளியேறக் கூடும் என்றும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

ஷெராட்டன் தங்கும் விடுதியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன் மஇகாவைப் பொறுத்தவரை தேசிய முன்னணி என்ன முடிவெடுக்கிறதோ அதைப் பின்பற்றி மஇகாவும் செல்லும் எனத் தெரிவித்தார்.