Home One Line P1 அரசியல் கட்சித் தலைவர்களுடன் மகாதீர் சந்திப்பு!

அரசியல் கட்சித் தலைவர்களுடன் மகாதீர் சந்திப்பு!

539
0
SHARE
Ad
படம்: துன் மகாதீர் இன்று அலுவலகத்தில் இடைக்காலப் பிரதமராக பணியைத் தொடங்கிய போது.

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் முக்கியத் தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டதாக பிரதமர் அலுவலகம் இன்று ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

ஜிபிஎஸ் கட்சியைச் சேர்ந்த டத்தோ பாதிங்கி அபாங் அப்துல் ராஹ்மான் ஜோஹாரி, பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த டான்ஸ்ரீ மகாதீர் முகமட், பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், ஜசெக கட்சியின் பொதுச்செயலாளர் லிம் குவான் எங், அம்னோ கட்சியைச் சேர்ந்த டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் அகமட் ஹமீடி, பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் மற்றும் அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு ஆகியோர் துன் மகாதீரை சந்தித்ததாக முகநூலில் பதிவிடப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி உடனான சந்திப்பு நடந்ததாகவும், நாளை புதன்கிழமை வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் உடன் சந்திப்பு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.