Home One Line P1 பிகேஆர் தலைமையகத்தில் நம்பிக்கைக் கூட்டணி அவசரக் கூட்டம்!

பிகேஆர் தலைமையகத்தில் நம்பிக்கைக் கூட்டணி அவசரக் கூட்டம்!

688
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைமையகத்தில், நம்பிக்கைக் கூட்டணியின் அவசர கூட்டத்தில் கலந்து கொள்ள அமானா கட்சித் தலைவர்கள் மற்றும் ஜசெக தலைவர்கள் பலர் வருகைத் தந்துள்ளதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

காலிட் சாமாட் (ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர்), சலாவுடின் அயோப் (பொந்தியான்) ஹுசாம் மூசா (அமானா உதவித் தலைவர்), லிம் குவான் எங் (பாகான்), லிம் கிட் சியாங் (இஸ்காண்டார் புத்ரி), டாக்டர் முகமட் ஹாட்டா ராம்லி (லுமுட்), மற்றும் எம். குலசேகரன் (ஈப்போ பாராட்) ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.