Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணி மட்டுமே நாட்டின் பெருமையை மீட்டெடுக்க முடியும்!- லிம் கிட் சியாங்

நம்பிக்கைக் கூட்டணி மட்டுமே நாட்டின் பெருமையை மீட்டெடுக்க முடியும்!- லிம் கிட் சியாங்

563
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு மரியாதையை மீண்டும் பெறுவதற்கு, ஒரு தேசமாக அதன் திறனை உருவாக்குவதற்கும், பூர்த்தி செய்வதற்கும் நம்பிக்கைக் கூட்டணியின் திட்டங்களே சிறந்த ஒரே வழி என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

“அம்னோ மற்றும் தேசிய முன்னணி மலேசியர்களின் பெருமையை விற்று விட்டனர். அதனை மீட்டெடுக்க நம்பிக்கைக் கூட்டணி உறுதிபூண்டுள்ளது.”

“எங்களது திட்டங்களை நிறைவேற்றுவதற்காக இந்த உறுதிமொழியை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும். மலேசியாவில் ஒற்றுமை, நீதி, சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த மலேசிய அரசியலமைப்பிற்கு திரும்ப வேண்டும்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்