கோலாலம்புர்: பெர்சாத்து கட்சி டான்ஸ்ரீ மொகிதின் யாசினை நாட்டின் 8-வது பிரதமராக முன்மொழிந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் மார்சுகி யாஹ்யா அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இடைக்கால பிரதமரும், பெர்சாத்துவின் தலைவருமான டாக்டர் மகாதீர் முகமட் தனது கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
பிரதமர் பதவிக்கான கட்சி வேட்பாளர் மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.