Home One Line P1 “பொய் சொல்லி பிரதமராக நியமனம் பெறுகிறீர்களா?” – மொகிதினுக்கு முக்ரிஸ் கேள்வி

“பொய் சொல்லி பிரதமராக நியமனம் பெறுகிறீர்களா?” – மொகிதினுக்கு முக்ரிஸ் கேள்வி

951
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் – பெர்சாத்து கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறி, பிரதமராக மாமன்னரிடமிருந்து பிரதமர் நியமனம் பெற்றிருக்கும் மொகிதின் யாசின் பொய் கூறி பிரதமர் ஆகிறாரா என பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரான முக்ரிஸ் மகாதீர் சாடியிருக்கிறார்.

தான் உட்பட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் துன் மகாதீருக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்திருக்கும்போது, மொகிதின் எப்படி பெர்சாத்து கட்சியின் 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை ஆதரிப்பதாகக் கூறுகிறார் என்றும் முக்ரிஸ் தனது முகநூல் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முக்ரிஸ் கூற்றுப்படி மகாதீர் (லங்காவி), முக்ரிஸ் மகாதீர் (ஜெர்லுன்), சைட் சாதிக் (மூவார்), மஸ்லி மாலிக் (சிம்பாங் ரெங்கம்), எடின் ஷாஸ்லி ஷித் (கோலபிலா), அமிருடின் ஹம்சா (குபாங் பாசு) ஆகிய ஆறு பேர் கொண்ட அணியினர், மீண்டும் மகாதீர் பிரதமராகும் முடிவை ஆதரிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

எனினும், இன்று மாலையில் விடுத்த அறிக்கை ஒன்றில் மஸ்லி மாலிக் மாமன்னரின் முடிவை மதிப்பதாகவும், மொகிதின் யாசின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்திருக்கிறார். எனினும் பின்னர் அந்த முகநூல் பதிவை மஸ்லீ மாலிக் நீக்கியிருக்கிறார்.

மாமன்னரின் முடிவைத் தான் ஆதரிப்பதாகவும் வரவேற்பதாகவும் மஸ்லீ மாலிக் கூறியிருப்பதால் மஸ்லீ மாலிக் தொடர்ந்து மகாதீரின் அணியிலேயே இருந்து வருவாரா என்ற ஐயப்பாட்டையும் எழுப்பியுள்ளது.

எடின் ஷாஸ்லியும் மாலையில் மொகிதின் யாசினின் இல்லத்தில் காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.