Home One Line P1 பேராக்: ஆட்சி மாறியதும், நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறி மூவர் தேசிய கூட்டணியில் இணைந்தனர்!

பேராக்: ஆட்சி மாறியதும், நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறி மூவர் தேசிய கூட்டணியில் இணைந்தனர்!

651
0
SHARE
Ad

ஈப்போ: பிகேஆரின் கோலா குராவ் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் யூனுஸ் ஜமாஹ்ரிக்குப் பிறகு, மேலும் மூன்று நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறினர்.

தேசிய கூட்டணி இன்று திங்கட்கிழமை புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்த சிறிது நேரத்தில் அவர்களின் இந்த அறிவிப்பு வெளியானது.

திரோனோ சட்டமன்ற உறுப்பினர் பால் யோங், ஏ.சிவசுப்பிரமணியம் (புந்தோங்) மற்றும் அமானாவைச் சேர்ந்த திதி செரோங் சட்டமன்ற உறுப்பினர் ஹாஸ்னுல் சுல்கார்னைன் அப்துல் முனைம் ஆகியோர் நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளர்.

#TamilSchoolmychoice

மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அறிவித்ததன் மூலம், தேசிய கூட்டணி இப்போது மாநில சட்டசபையில் 32 இடங்களையும்,நம்பிக்கைக் கூட்டணி 24 இடங்களையும் கொண்டுள்ளது.