Home One Line P2 கொவிட்-19: யூரோ 2020 அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு!

கொவிட்-19: யூரோ 2020 அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு!

568
0
SHARE
Ad

பாரிஸ்: யூரோ 2020 இந்த வருடம் நடைபெறாது எனவும், அடுத்த வருடம் யூரோ 2021-ஆக பெயர் மாற்றப்பட்டு நடைபெறும் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவிருந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் விளையாட்டு கொவிட் -19 பாதிப்புக் காரணமாக 2021 வரை ஒத்திவைக்கப்படும் என்று யுஇஎப்ஏ (UEFA) நேற்று செவ்வாயன்று உறுதிப்படுத்தியது.

24 அணிகள் கொண்ட போட்டிகளுக்கான உத்தேச புதிய தேதிகள் அடுத்த ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“யுஇஎப்ஏ இன்று தனது முதன்மை தேசிய அணி போட்டியான யுஇஎப்ஏ யூரோ 2020 விளையாட்டை இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. விளையாட்டில் ஈடுபட்டுள்ள அனைவரின் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவையற்ற அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்கவும் கொவிட் -19 அவசரநிலை காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் முடிக்க இந்த நடவடிக்கை உதவும் ”என்று ஐரோப்பிய கால்பந்தின் ஆளும் குழு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.