Home One Line P1 இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு விரைவில் தீர்வு!- விஸ்மா புத்ரா

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு விரைவில் தீர்வு!- விஸ்மா புத்ரா

634
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்போது இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா ஒரு தீர்வைத் தேடும் என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்தார்.

அவர்கள் திரும்பி வருவதற்கு விஸ்மா புத்ரா அனுமதிக்க மறுத்துவிட்டது என்ற கருத்தை அவர் மறுத்தார். இந்த விஷயம் அரசாங்கத்தின் அதிகார எல்லைக்கு வெளியே இருப்பதாகவும், இந்திய அரசாங்கத்தை சார்ந்தது என்றும் அவர் விளக்கினார்.

#TamilSchoolmychoice

“கொவிட் -19 தொடர்பான இந்திய அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து பல மலேசியர்கள் அழுத்தத்தில் உள்ளனர் மற்றும் இந்தியாவில் இருந்து விமானத்தை திரும்பப் பெறுவதில் சிக்கல் உள்ளது என்பதை நான் கவனிக்கிறேன்.”

“சமூக பக்கத்தில் வெளிவந்த ஒரு காணொளி, மலேசிய அரசாங்கத்தின் முடிவு இது என்று இந்திய அதிகாரி கூறுகிறார். இது முற்றிலும் பொய்யானது” என்று அவர் நேற்று செவ்வாய்க்கிழமை முகநூல் பதிவில் தெரிவித்தார்.

விஸ்மா புத்ரா உருவாக்கிய கொவிட்- 19- இன் சிறப்புப் படைக் குழு மலேசியா திரும்ப விரும்புவோருக்கு உதவுவதற்கான முயற்சிகளை ஆராய்ந்து வருவதாக ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.

“மஇகா உயர் மட்டத் தலைவர்களும் என்னைத் தொடர்பு கொண்டு நேரடியாக உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். விரைவில் ஒரு தீர்வு காணலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

100-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தங்கள் விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்ட பின்னர் இந்தியாவில் பல விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர் என்ற மலேசியாகினி அறிக்கை குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.