Home One Line P1 கொவிட் 19 – மஇகா தலைமையகமும் மூடப்பட்டிருக்கும்; கூட்டங்களுக்கும் தடை

கொவிட் 19 – மஇகா தலைமையகமும் மூடப்பட்டிருக்கும்; கூட்டங்களுக்கும் தடை

625
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாடு முழுவதும் அமுலுக்கு வந்திருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கு ஏற்ப, இன்று புதன்கிழமை முதல் மஇகா தலைமையகமும் மூடப்பட்டிருக்கும் என மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.

அடுத்த அறிவிப்பு வரை மஇகா தலைமையகம் மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமர் மொகிதின் யாசினின் உத்தரவுக்கு ஏற்ப, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் ஒப்புதலோடும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அசோஜன் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“அரசு எடுத்திருக்கும் இந்த இயல்புநிலை முடக்கமானது, சற்றே தளர்வானது போன்று இருப்பதாக நினைத்து மெத்தனமாக எடுத்துக்கொண்டால், விளைவு மோசமாகலாம். சீனாவில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்ட, கட்டாய இயல்பு நிலை முடக்கு அணுகுமுறையால்தான் கொவிட் 19 பெருந்தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. அனைவரும் வெளிநடமாட்டத்தை உடனடியாகக் குறைத்து, தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்கிற சுயக்கட்டுப்பாட்டை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்” என்றும் அசோஜன் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மஇகா கூட்டங்களுக்கும் தடை!

இதற்கிடையில் கடந்த 16 மார்ச் தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றின் வழி மஇகாவின் அனைத்து நிலையிலான கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும் எம்.அசோஜன் அறிவித்திருந்தார்.

சங்கங்களின் பதிவதிகாரி விடுத்திருக்கும் அறிக்கை, அறிவுரைக்கேற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதிக அளவில் மக்கள் கூடும் கூட்டங்களையும் மஇகாவினர் தவிர்க்க வேண்டுமென்றும் அசோஜன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.