Home One Line P1 கொவிட்-19: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உடன்படாவிட்டால், ‘சுனாமி’ போன்ற அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!

கொவிட்-19: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உடன்படாவிட்டால், ‘சுனாமி’ போன்ற அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!

615
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மக்கள் வீட்டிலேயே இருக்கவும், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்குக் கீழ்ப்படியவும் அறிவுறுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறினால், கொவிட் -19 பாதிப்பு மோசமான நிலையை அடையலாம் என்று நூர் ஹிஷாம் கூறினார்.

#TamilSchoolmychoice

“தோல்வி அடைவது இங்கு நோக்கம் இல்லை. இது செய்யப்படாமல் தவிர்த்தால் நாம் வைரஸின் மூன்றாவது அலையை எதிர்கொள்ளக்கூடும். இது ‘சுனாமி’யைப் போல பெரியதாக இருக்கும்,”

“நான் அனைத்து மலேசியர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன், தயவுசெய்து இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டிலேயே இருங்கள், வெளியே செல்ல வேண்டாம்” என்று நூர் ஹிஷாம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலேசியாவுக்கு இப்போது நாடு முழுவதும் கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் தோற்றத்தை  தீர்மானிக்க சிறிதளவே வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

“ஒவ்வொரு நபரும் தனது குடும்பத்தின் நலன்களுக்காக ஒவ்வொரு அடியையும் எடுப்பதற்கு பொறுப்பேற்பதால், உங்கள் பங்கைச் செய்வதன் மூலம் சுகாதார அமைச்சுக்கு உதவுங்கள்” என்று அவர் கூறினார்.

அபாயகரமான கொவிட் -19 பாதிப்பால் இரண்டு மலேசியர்கள் இறந்துள்ளனர், மேலும் இதுவரைக்கும் 600-க்கும் மேற்பட்டவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.