Home One Line P1 கொவிட்-19: நாட்டில் 3 மில்லியன் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்கவில்லை!

கொவிட்-19: நாட்டில் 3 மில்லியன் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்கவில்லை!

417
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் 10 விழுக்காட்டினர் அல்லது சுமார் 3 மில்லியன் மக்கள் இன்னமும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்கவில்லை என்று மலேசிய ஆயுதப்படை தெரிவித்துள்ளது.

“இக்கட்டளைக்கு 90 விழுக்காட்டினர் இணங்கியிருந்தாலும், இதனை மறுக்கும் 10 விழுக்காட்டினரை நாம் குறைத்துப் பார்க்க முடியாது.”

#TamilSchoolmychoice

“இந்த விழுக்காடு சுமார் 3 மில்லியன் மக்களைக் குறிவைக்கிறது. இது ஒரு பெரிய எண்ணிக்கையாகும்” என்று இராணுவம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே, கொவிட் -19 நோயை எதிர்க்க அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய மக்கள் மத்தியில் ஒழுக்கத்தை ஏற்படுத்த காவல் துறைக்கு, இராணுவம் உதவும்.

“இராணுவம், காவல் துறை ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை, குறிப்பாக இராணுவம் என்ன பங்கு வகிக்கும் என்று விவாதிக்கத் தேவையில்லை”

“இந்த பாதிப்பைக் கையாள்வதில் எங்களால் முடிந்தவரை விரைவாக செயல்பட வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம்” என்று மலேசிய ஆயுதப்படை கூறியது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்கு அமல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆயுதப்படை ஒப்புக்கொண்டன.

சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஆகியவை இதில் அடங்கும்.

“எந்தவொரு செய்தி அறிக்கைகள், குறிப்பாக தகவல், படங்கள், காணொளிகள் அல்லது பெரிய அளவிலான இராணுவ செயல்பாடுகளைக் காட்டும் ஒலிப் பதிவுகள், அல்லது இராணுவத்தினரால் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவது போன்றவற்றால் பொய்யுரைக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.”

“இது மக்கள் மத்தியில் கவலை மற்றும் பீதியை ஏற்படுத்தும்” என்று அது கூறியது.