Home One Line P1 கொவிட்-19: மலேசியாவில் 11-வது மரணம் பதிவானது!

கொவிட்-19: மலேசியாவில் 11-வது மரணம் பதிவானது!

545
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மற்றொரு கொவிட்-19 தொடர்பான மரணம் இன்று திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனுடன் மலேசியாவில் இந்த தொற்று நோய்க் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட செய்தியில், 11- வது மரணம் 70 வயதான மலேசியர் என்றும், அவர் நீண்டகால நோய் வரலாறு கொண்டவர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“பிப்ரவரியில் இந்தோனிசியாவுக்கு அவர் சென்றுள்ள பயண வரலாறு உள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.