கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று திங்கட்கிழமை 212 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மொத்தமாக 1,518 சம்பவங்கள் நாட்டில் பதிவாகி இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், இந்த எண்ணிக்கையில் 123 சம்பவங்கள் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்புடையது என்று அவர் தெரிவித்தார்.
இன்று நான்கு பேர் இறந்துள்ள நிலையில், இதுவரையிலும், நாட்டில் மொத்தம் 14 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக மரணமுற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று 20 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 159-ஆக உயர்ந்தது.