Home கலை உலகம் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 14 முதல் 28 வரை புதிய ‘Stay Home கச்சேரி’  

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 14 முதல் 28 வரை புதிய ‘Stay Home கச்சேரி’  

827
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பொதுமக்கள் தங்களின் இல்லங்களில் பாதுகாப்பாக இருக்கும் இந்த வேளையில் ஆஸ்ட்ரோ அலைவரிசை 700 வாயிலாக புகழ்பெற்ற உலகளாவிய மற்றும் உள்ளூர் இசைக் கலைஞர்கள்  இடம்பெறும் 30-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

வீட்டில் இருங்கள் (Stay Home) கச்சேரி

  • அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் ஒரு புதிய கச்சேரி மற்றும் இசை அலைவரிசை, Stay Home கச்சேரி (அலைவரிசை 700) ஆகியவற்றை ஏப்ரல் 14 முதல் 28 வரை ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி மற்றும் ஆன் டிமாண்ட் அல்லது ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.
  • Universal Music Malaysia, Warner Music Malaysia, MTV, ONE TV Asia, K-Plus, Malaysian Philharmonic Orchestra மற்றும் எங்களின் பல கூட்டாளர்களின் ஒத்துழைப்புடன் Stay Home கச்சேரி (அலைவரிசை 700) வாடிக்கையாளர்களுக்கு பன்னாட்டு, கொரியா மற்றும் உள்ளூர் இசை நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
  • தங்களின் வீட்டின் சுகமான அறையின் முன் வரிசை இருக்கையில் அமர்ந்து, வாடிக்கையாளர்கள் சிறந்த இசை பிரபலங்களின் நிகழ்ச்சிகள், உலகளாவிய இசை தொடர்கள், பிரபலமான கொரியா இசை நிகழ்ச்சிகள், சிறந்த ஆவணப்படங்கள் மற்றும் வாழ்க்கை வரலாறுகள், குழந்தைகளின் சிறந்த நிகழ்ச்சிகள், கலைஞர்களுடன் நேர்காணல்கள், சிறந்த ‘அன்பிளக்’ நிகழ்ச்சிகள் என 30-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
  • புகழ்பெற்ற சர்வதேச இசை நிகழ்ச்சிகள், அதாவது, Coldplay Live in Sao Paolo, Ed Sheeran’s Jumpers for Goalposts: Live at Wembley Stadium, U2360° at the Rose Bowl, Taylor Swift – Speak Now World Tour Live Concert, Spice Girls – Live at Wembley Stadium, Katy Perry – The Prismatic World Tour Live, Eminem –MTV World Stage -இன் Live From NYC, Muse மற்றும் பல;
  • Lady Gaga, Billie Eilish, Shah Rukh Khan, Lang Lang, David Beckham, Idris மற்றும் Sabrina Elba, Stevie Wonder மற்றும் Jimmy Fallon, Jimmy Kimmel மற்றும் Stephen Colbert தொகுத்து வழங்கும் One World: Together At Home-இன் சிறப்பு முதல் ஒளிபரப்பு (பிரீமியர்);
  • த்ரோபேக் சிறப்பு நிகழ்ச்சிகளான The Beatles – Live at the Washington Coliseum, The Eagles Live in Melbourne, மற்றும் பல;
  • K-pop பிரபலங்களான BTS, Blackpink, Twice, Red Velvet, EXO, GOT7, Seventeen மற்றும் பலரை உள்ளிட்ட  SBS Gayo Daejon 2019 & 2018, SBS Super Concert தொடர், MBC Korean Music Festival 2019, 2019 KCON NY, மற்றும் பல;
  • சிறந்த ஆசிய கலைஞர்கள் உள்ளிட்ட Sammi Touch Mi 2 Live-இல் Sammi Cheng மற்றும் Grasshopper Live Goes On World Tour 2017-இல் Grasshopper;
  • அன்பிளக்ட் நிகழ்ச்சிகள், Elton John, Liam Gallagher மற்றும் Shawn Mende இடம் பெரும் MTV Unplugged மற்றும் சிறந்த உள்ளூர் கலைஞர்கள் இடம் பெறும் Ria Unplugged மற்றும் பல;
  • உள்ளூர் கலைஞர்களான Sheila Majid, M. Nasir, Ramli Sarip, Wings, KRU மற்றும் Anuar Zain இடம் பெறும் Konsert Gergasi KRU 25, 25 Years of Sheila Majid, Konsert Wings: Best of Rock, Konsert Zaman Ramli Sarip 1 & 2, Konsert Throwbaek 2019 மற்றும் உள்ளூர் இந்திய பாடகர்கள் இடம் பெரும் ஒற்றுமை மற்றும் இசை நிகழ்ச்சிகளான Endrume Raja Concert 2017, Ellorum Kondaduvom Concert 2016, மற்றும் பல;
  • ஆவணப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு சிறப்பு நிகழ்ச்சிகளான Fenomena Gergasi KRU25, Pesta Muda Mudi, BTS Entertainment Chronicles, M Nasir உடன் நேர்காணல்கள் Korek Fizikal, Yuna, Noh Salleh, Monoloque, வாழ்க்கை வரலாற்று சிறப்பு நிகழ்ச்சிகளான Saloma: Mencuri Guruh & Pandang Kaseh மற்றும் பல;
  • குழந்தைகள் சிறப்பு நிகழ்ச்சிகளான Daiyan Trisha இடம் பெரும் Dee Telemovie மற்றும் Tong Tong Wonderland கச்சேரி, The Five Elves: A Magical Journey Musical Show மற்றும் Happy Castle Live Concert Special; மற்றும் பல;

பார்வையாளர்கள்  கொவிட் முன்னணி வீரர்களுக்கு (FRONTLINER) ஆதரவு அளிக்கலாம்.

  • 19 முதல் ஏப்ரல் 28 வரை, வாடிக்கையாளர்கள் கொவிட் முன்னணி வீரர்களுக்கு தங்கள் ஆதரவைக் காட்டலாம்:
  • #TQFrontliners #AstroStayHomeConcert என டுவிட்டரில் முன்னணி வீரர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கும் வண்ணம் பிரத்தியேக செய்திகளை அனுப்பலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில செய்திகளை CH 700-இல் நாங்கள் இடம் பெறச் செய்வோம்.
  • Tabung Bantuan Frontliners COVID-19 Sinar Harian’ வழி நன்கொடை வழங்கலாம். மேல் விபரங்களுக்கு வாடிக்கையாளர்கள் https://www.ideaktiv.com/tabung-bantuan-frontliners-covid-19/ எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.
#TamilSchoolmychoice

நிகழ்ச்சி விவரங்களைப் பின் தொடர :

astro.com.my

fb.com/astro

instagram.com/astromalaysia