Home One Line P2 ஆபத்திலும் பாடம் கற்பித்த கொவிட்-19- தாய்லாந்தில் யானை சவாரி சேவை நிறுத்தப்பட்டது!

ஆபத்திலும் பாடம் கற்பித்த கொவிட்-19- தாய்லாந்தில் யானை சவாரி சேவை நிறுத்தப்பட்டது!

789
0
SHARE
Ad

சியாங் மாய்: கொவிட்-19 பாதிப்புகள் உலக மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்திய அதே நேரத்தில், ஒரு சிலருக்கு ஞானத்தை கொண்டு வந்துள்ளதையும் காண முடிகிறது.

சியாங் மாயில் உள்ள மேசா யானை முகாம் மூடப்பட வேண்டிய சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் அங்குள்ள யானைகள் அன்றாட பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

முகாமில் இருக்கும் 78 யானைகளும் இனி பார்வையாளர்களாக ஏற்றிச் செல்ல வேண்டியதில்லை எனவும், இந்த பாதிப்பு முடிந்த பிறகும் இந்த சேவை நிறுத்தப்போவதாக முகாம் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

விலங்குகள் இப்போது முகாம் பகுதிகளில் சுதந்திரமாக சுற்ற அனுமதிக்கப்படுகின்றன. மேலும் பார்வையாளர்கள் அவற்றை தூரத்திலிருந்து மட்டுமே பார்க்க முடியும்.

“நாங்கள் 1976- இல் இந்த சேவையில் செயல்படத் தொடங்கினோம். யானை சவாரி செய்வது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த செயலாகும்” என்று முகாம் இயக்குனர் அஞ்சலீ கலம்பிச்சிட் கூறினார்.

“நாங்கள் மீண்டும் செயல்பட்ட பிறகும் (யானை சவாரி) திரும்பவும் கொண்டு வரப்படாது.”

சுற்றுலாப் பயணிகளின் வீழ்ச்சி தாய்லாந்தில் நூற்றுக்கணக்கான யானை பூங்காக்களை மூட நிர்பந்தித்தது.

சியாங் மாயில் மட்டும் 93 முகாம்களும் யானைத் தோட்டங்களும் உள்ளன.