Home நாடு ‘உகாதி சுபகாஞ்சலு’ வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்

‘உகாதி சுபகாஞ்சலு’ வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்

725
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், ஏப்ரல் 11- தெலுங்கு புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து தெலுங்கு குடிமக்களுக்கும் மலேசியர்களின் சார்பில் ‘உகாதி சுபகாஞ்சலு’ வாழ்த்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று தெரிவித்துக் கொண்டார்.

மலேசிய தெலுங்கு சமூகத்திற்கு மலேசியர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவிலுள்ள தெலுங்கு சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் கலாச்சாரத்தைப் பேணுவதற்கும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றுபட்டு செயல்படுவதை தொடர்வோம் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

சமூகத்திற்கும் நாட்டிற்கும் உண்மையான உருமாற்றுத் திட்டத்தை செயல்படுத்துவதில் சத்து மலேசியா உணர்வில் தொடர்ந்து செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.