ஜெனீவா: உலக சுகாதார நிறுவனத்தின் நிதியை முடக்குவதற்கான தனது முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கேட்டுக் கொண்டார்.
மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
“அமெரிக்கா பல ஆண்டுகளாக உலக சுகாதார நிறுவனத்தை ஆதரித்தது மற்றும் முதலிட பங்களிப்பாளராக இருந்து வருகிறது. அதை நாங்கள் பாராட்டுகிறோம்” என்று டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஒரு மாநாட்டில் கூறினார்.
முன்னதாக, உலக சுகாதார நிறுவனம் கொவிட்-19 நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறியதாகவும், விரைவாக செயலாற்றத் தவறியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
மேலும், இதன் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா நிதி உதவி இனி அளிக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.