கோலாலம்பூர்: பந்துவான் பிரிஹாதின் நேஷனலுக்கான (பிபிஎன்) அனைத்து புதிய விண்ணப்பங்களும் முறையீடுகளும் ஏப்ரல் 30- க்குள் செய்யப்பட வேண்டும் என்று உள்நாட்டு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்தும், பட்டியலிடப்படாத அல்லது பிபிஎன் விண்ணப்பம் தேர்வு பெறாத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் https://bpn.hasil.gov.my- இல் அதிகாரப்பூர்வ பிபிஎன் தளத்தின் மூலம் அவ்வாறு செய்யலாம்.
“பெறப்பட்ட புதிய விண்ணப்பங்கள் மற்றும் முறையீடுகள் ஒவ்வொன்றும் மே 2020- இல் செயலாக்கத் தொடங்கும். மே மாதத்திலும் மொத்த தொகை செலுத்தப்படும்” என்று அது இன்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் தகவலுக்கு விண்ணப்பதாரர்கள் பிபிஎன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றிய பிபிஎன் கேள்விகளை அணுகலாம் அல்லது https://bpn.hasil.gov.my/Download/Faq/BPN2020_(FAQ)_BantuNationalNews(Update) % 2017042020) .pdf.என்ற இணைப்பை அழுத்தலாம்.
இது தொடர்பான எந்தவொரு கேள்விகளையும் 03-8911 1000 அல்லது 603-8911 1100 (வெளிநாடுகளில்) மூலம் அனுப்பலாம்.