Home One Line P1 இன்றிரவு தொடங்கி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள்!

இன்றிரவு தொடங்கி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள்!

444
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொது மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் மொத்தம் 1,128 மாணவர்கள் இன்று திங்கட்கிழமை இரவு தொடங்கி 24 மணி நேரத்திற்குள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

இன்று இரவு 863 மாணவர்கள் மத்திய மண்டலத்திலிருந்து வடக்கு மண்டலத்திற்கு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். வடக்கு மண்டலத்திலிருந்து 265 மாணவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை இரவு மத்திய மண்டலத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

“இந்த செயல்முறையில் 17 இடங்களுக்கு ஒன்பது பல்கலைக்கழகங்களிருந்து, 49 பேருந்துகள் இயங்கும்”

#TamilSchoolmychoice

“இடங்களுக்குச் செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னர் பேருந்துகள் சுத்திகரிக்கப்படும். மாணவர்களின் சாமான்களும் சுத்திகரிக்கப்படும்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நாளை காலை 9 மணியளவில் மாணவர்கள் பேருந்து சென்றடையும் இடத்திற்கு வந்தபோது, ஒரு வாகனத்தில் ஒரு குடும்ப உறுப்பினர் மட்டுமே அவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும், வாகனம் இல்லாதவர்களுக்கு, முன்னணிப் பணியாளர்கள் மாணவர்களை நேரடியாக தங்கள் வீடுகளுக்கு அனுப்புவார்கள் என்றும் அவர் கூறினார்.