Home One Line P1 இரண்டு பேராக் அரசியல்வாதிகளும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கை மீறவில்லை!

இரண்டு பேராக் அரசியல்வாதிகளும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கை மீறவில்லை!

599
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

கோலாலம்பூர்: இரண்டு பேராக் அரசியல்வாதிகள் நடமட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கை மீறவில்லை என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக, அவர்கள் நகர்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி மற்றும் பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் ரஸ்மான் சாகாரியா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. அவர்கள் நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றத் தவறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அவர்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறவில்லை என்றும் அவர் விளக்கினார்.

“அவர்கள் பயணத்தில் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்பதால் அவர்கள் மக்கள் நலனைப் பார்க்க வேண்டும்.”

#TamilSchoolmychoice

“இங்கே இரட்டைத் தரம் இல்லை. குற்றச்சாட்டுகள் வேறுபட்டதால் அபராதம் வேறுபட்டது.”

“அவர்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறவில்லை, ஆனால் அவர்கள் நிலையான இயக்க முறையை பின்பற்றவில்லை,” என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 28-ஆம் தேதி பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டாக்டர் நூர் அஸ்மி, கூனுங் செமாங்கோல் சட்டமன்ற உறுப்பினரான ரஸ்மான் மற்றும் 13 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மேலும், ஒவ்வொருவருக்கும் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்க நீதிபதி நோர்ஹிடாயாதி முகமட் நஸ்ரோ உத்தரவிட்டார்.