புத்ரா ஜெயா: இன்று வியாழக்கிழமை (மே 7) நண்பகல் வரை மலேசியாவில் 39 புதிய பாதிப்புகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,467-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 74 பேர்கள் கொவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,776-ஆக உயர்ந்திருக்கிறது என்று சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா (படம்) இன்று நடத்திய அன்றாட பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தற்போது நாடு முழுமையிலும் 1,584 பேர்கள் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 19 பேர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 8 பேர்கள் மட்டுமே சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.