கோவிட் 19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் வீட்டில் முடங்கியிருக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேச்சாற்றலை வெளிக்கொணரும் நோக்கிலும் சிறந்த மேடைப்பேச்சாளர்களை உருவாக்கும் உயரிய எண்ணத்திலும் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று சுற்றுகளாக நடத்தப்படும் இப்போட்டியின் முதல் சுற்று காணொளி வாயிலாக நடத்தப்பட்டது.
1655 காணொளிகள் போட்டிக்கு வந்த வேளையில் 175 சிறந்த பேச்சாளர்கள் அடையாளங் காணப்பட்டு இரண்டாம் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டனர். 9 மாநிலங்களை உள்ளடக்கிய இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இயங்கலையில் ஓம்தமிழ் வலையொளி (YouTube) மூலம் நேரலையாக நடத்தப்பட்டது.
இரண்டாம் சுற்றிலிருந்து மொத்தம் 30 மிகச்சிறந்த பேச்சாளர்கள் மாபெரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
மாபெரும் இறுதிச் சுற்றில் வெற்றி பெரும் பேச்சாளர்களுக்கு 1000 ரிங்கிட் வரையிலான ரொக்கப்பரிசும் சிறப்புப் பரிசுகளும் நற்சான்றிதழ்களும் வழங்கப்படும். முதல், இரண்டாம் சுற்றில் பங்கேற்ற மாணவர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
நேர்படப்பேசு மாபெரும் இறுதிச் சுற்றை உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் யூடியூப் தளத்தின் வழி காணும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இப்போட்டியைத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஏனைய தமிழ் ஆர்வலர்களும் கண்டு களித்து பயனடையுமாறு சிகரம் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உலக வரலாற்றில் ஆயிரக்கணக்கான தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஈர்த்த முதல் இயங்கலைப் போட்டியாக நேர்படப்பேசு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்தப் போட்டிகளை யூடியூப் தளத்தில் காண்பதற்கான இணைப்பு பின்வருமாறு: