Home One Line P1 கொவிட்19: 40 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்

கொவிட்19: 40 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்

511
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: இன்று வியாழக்கிழமை (மே 14) நண்பகல் வரை மலேசியாவில் 40 புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,819-ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் கொவிட் பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,351-ஆக உயர்ந்திருக்கிறது என்று சுகாதார அமைச்சின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுமையிலும் 1,356 பேர் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 4 பேர் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இன்று ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், நாட்டில் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 112 பேராக உயர்ந்துள்ளது.