Home One Line P1 தேசிய கூட்டணியை முறையாக பதிவு செய்வதில் அவசரம் தேவையில்லை!- அனுவார் மூசா

தேசிய கூட்டணியை முறையாக பதிவு செய்வதில் அவசரம் தேவையில்லை!- அனுவார் மூசா

603
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியின் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு இணக்கமானது என்றும், கூட்டணியை முறையாக பதிவு செய்வதற்காக அவசரப்பட தேவையில்லை என்றும் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

தேசிய கூட்டணியைப் பதிவு செய்வதற்கான திட்டம் குறித்து. கட்சி உறுப்பினர்களின் கருத்துகளை, அடிமட்டம் உட்பட ஒவ்வொரு மட்டத்திலும் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் உறவுகள் மிகவும் இணக்கமானவை, நிச்சயமாக இந்த நல்லிணக்க சூழ்நிலையை பேண வேண்டும்.”

“எனவே அவசரப்பட தேவையில்லை, ஒவ்வொரு தரப்பினருக்கும் (கட்சி) ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது.”

ஒவ்வொரு செயல்முறையை குறித்தும் முடிவெடுக்கும் நடைமுறை தலைமை மட்டத்தில் மட்டும் நடைபெறாது. இது குறித்து முடிவெடுப்பதற்கு உயர் மட்டத்தில் விவாதிக்கப்பட்டு கட்சியின் பொது விவாதத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அனுவார் கூறினார்.

வெளிப்படையாக, தேசிய கூட்டணியில் ஒத்துழைக்கும் ஒவ்வொரு கட்சியும் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் அதன் சொந்த நடைமுறைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.