Home One Line P1 மாமன்னரின் உரையை சீர்குலைக்க முயற்சிகள் இருப்பின் நம்பிக்கைக் கூட்டணி எதிர்க்கும்

மாமன்னரின் உரையை சீர்குலைக்க முயற்சிகள் இருப்பின் நம்பிக்கைக் கூட்டணி எதிர்க்கும்

737
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் மாமன்னரின் தொடக்க உரையை மதிக்க வேண்டும் என்றும் அதனை சீர்குலைக்க முயற்சிக்கக்கூடாது என்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

“மாமன்னரின் உரையை சீர்குலைக்க ஏதேனும் முயற்சி இருந்தால் நம்பிக்கைக் கூட்டணி எதிர்க்கும்” என்று பிகேஆர் தலைவரும் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமானஅவர் நேற்று முகநூலில் நேரடி அமர்வில் தெரிவித்தார்.

தேசிய கூட்டணி அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதில் நம்பிக்கை இல்லாததால், திங்களன்று ஒரு நாள் அமர்வில் விவாதங்கள் அனுமதிக்கப்படவில்லை என்று புதிய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

“சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சகங்கள் அல்லது அரசாங்க நிறுவனங்களில் பதவிகளை விரும்புகிறார்கள். அவர்கள் அதைப் பெறாவிட்டால், அவர்கள் வேறு கட்சிக்கு தாவுவார்கள்.

“அடுத்த பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் இதைக் கவனித்து கொள்கை மற்றும் இலட்சியவாத வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று அன்வார் குறிப்பிட்டார்.