Home One Line P1 ஜாலான் புடு முட்கம்பிகளால் மூடப்பட்டது

ஜாலான் புடு முட்கம்பிகளால் மூடப்பட்டது

515
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜாலான் புடுவில் சில பகுதிகள் நேற்று முன்தினம் முதல் முட்கம்பிகளால் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த பகுதி முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.

ஜாலான் புடுவிலுள்ள டி மெஜஸ்டிக் பிளேஸ் தங்கும்விடுதிக்கு அருகிலுள்ள பகுதியில் இருந்து ஜாலான் லண்டாக் வரை முட்கம்பிகளை நிறுவ அதிகாரிகள் நேற்று இரவு 10 மணியளவில் வந்ததாக அப்பகுதியில் உள்ள ஒரு வெளிநாட்டு தொழிலாளி மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் ஒரு பேருந்தில் 12-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை அப்பகுதிக்கு அழைத்து சென்றதைத் தொடர்ந்து ஏதோநடக்கப் போவதாக அவர் உணர்ந்ததாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

சில கடை உரிமையாளர்கள் அந்த பகுதிக்குள் நுழைய முடியாமல் ஏமாற்றமடைந்தனர். அதே நேரத்தில் கடை உரிமையாளர்கள் சிலர் தடைசெய்யப்பட்ட பகுதியில் சிக்கித் தவித்தனர்.

“இது முழுமையான கட்டுப்பாடு அல்ல. ஆனால், அது கட்டுப்பாட்டை தீவிரப்படுத்துகிறது. சௌ கிட் சந்தையை போல அல்ல. ” என்று அவர் கூறினார்.